குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
கடந்த (03.07.2024)-ந் தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட SIT சந்திப்பின் அருகே காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்கள் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் சுமார் 27 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களான மொத்தம் 240 கிலோ (மதிப்பு ரூ.4,00,000/-) குட்கா புகையிலை பொருள்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
உடனடியாக மேற்படி குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குட்கா புகையிலை பொருள்களை கடத்தி வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (39), த.பெ.பழனிவேல் மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த செல்வகுமார் (26), த.பெ.வேலுமணி கைது செய்தும், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி நபர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் மேற்படி இரண்டு நபர்களை விசாரணை செய்ததில் தாங்கள் கடத்தி வந்த குட்கா பொருட்களை திருச்சி, திருமலைசமுத்திரத்தை சேர்ந்த சுரேஷ் (49), த.பெ.கண்ணையன் என்பவர் மூலமாக திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர் பகுதியில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்ததன் பேரில், மேற்படி நபரை விசாரணை செய்தும், கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் சுரேஷ் என்பவர் மீது ஏர்போர்ட் மற்றும் திருச்சி மாவட்டம் மணிகண்டம் காவல்நிலையங்களில் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக தலா ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எதிரி சுரேஷ் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஸ்ரீநாத் மற்றும் செல்வகுமார் ஆகியோர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி மாநகரில் போதை பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருள்களை கடத்தி விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision