அரசு பள்ளியில் சிலிண்டர் டியூப் வெடித்து விபத்து

அரசு பள்ளியில் சிலிண்டர் டியூப் வெடித்து விபத்து

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சி ஆனைக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலறையில் சமையலர் ரேவதி சமையல் செய்யும்பொழுது எதிர்பார்த்து விதமாக கேஸ் டீப் தீ பற்றியது. பதறிய ரேவதி சத்தம் போட்டுள்ளார்.

ரேவதியின் சத்தத்தை கேட்ட அங்கிருந்த இளைஞர்கள் ஓடி வந்து சிலிண்டர் மீது சணல் சாக்கை போட்டு வெளியில் தூக்கி எறிந்தனர். இதனால் சிலிண்டர் வெடிக்காமல் இருந்தது. சமையலறையில் இருந்த முட்டை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் சேதம் ஆயினது. பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்தி பள்ளி மாணவ குழந்தைகள் அனைவரையும் அருகில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்த திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு நடந்த விபத்து குறித்து தலைமை ஆசிரியர் காந்தி சமையலர் ரேவதி ஆகியோரிடம் கேட்டறிந்தனர். பின்பு சிலிண்டர் அடுப்பு தேவையான உபகரண பொருட்களை வாங்கி கொடுக்க உத்தரவிட்டார். 

பின்பு புதிதாக தயார் செய்த மதிய உணவு சாப்பாடு முட்டை ஆகியவற்றை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கினார். நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி வட்டார கல்வி அலுவலர் சேகர் தலைமையாசிரியர் காந்தி ஒன்றிய கவுன்சிலர் எல் ஆர் எஸ் சுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதி பெரியண்ணன் கிளை செயலாளர் ராமமூர்த்தி நாகையநல்லூர் நாகராஜன் காடுவெட்டி கிளை செயலாளர் குமார் கிராம நிர்வாக அலுவலர் திருஞானம் ஆகியோர் உடன் இருந்தனர் 

ஆனைகல்பட்டி இளைஞர்கள் தீயை அனைத்துதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் இளைஞர்களை பாராட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision