வரகனேரி பகுதியில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை மூட்டைகள்
தூய்மை நகர தரவரிசை பட்டியலில் வருடந்தோறும் திருச்சி மாநகராட்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு மாநகர் முழுவதும் எங்கும் குப்பை தேங்கி கிடப்பதே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதன் ஒருபகுதியாக திருச்சி வரகனேரி பகுதியைச் சுற்றி உள்ள முஸ்லிம் மேட்டுத்தெரு, கல்பாளையம் மைதானம், ஒருகட்டன் மலைரோடு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் ஆகிய இடங்களில் குப்பைகள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது.
இதனால் மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கும் இந்த குப்பைகள் காரணம் இருக்கிறது. மேலும், போதிய குப்பை அள்ளும் வண்டிகள் இல்லாதது தான் குப்பைகள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு வருகிறது என்று தூய்மை பணியாளா்கள் கூறுகின்றனர்.
ஆகவே உடனடியாக மாநகராட்சி மாற்று ஏற்பாடுகளை செய்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வரகனேரி கிளையின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய