காந்தி மார்க்கெட்டில் சில்லறை வர்த்தக கடைகள் மூடல்

காந்தி மார்க்கெட்டில் சில்லறை வர்த்தக கடைகள் மூடல்

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக,  திருச்சி காந்தி சந்தையில் இயங்கிவரும் காய்கறி, பழங்கள், பூ உள்ளிட்டவற்றுக்கான  சில்லறை வர்த்தக கடைகள் இன்று இரவு முதல் மூடப்படுகிறது.

இக்கடைகள் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இரயில்வே மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. திருச்சி காந்தி சந்தையில் உள்ள மொத்த வியாபாரிகள் விரும்பினால் ஜி கார்னர் மைதானத்தில் மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

திருச்சியில் உள்ள சந்தைகள்,  தற்காலிக சந்தைகள்,  வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றில்  கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr