திருச்சி பழைய விமான நிலைய முனையம் மூடல் - புதிய முனையம் திறப்பு அறிவிப்பு

திருச்சி பழைய விமான நிலைய முனையம் மூடல் - புதிய முனையம் திறப்பு அறிவிப்பு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1112 கோடியில் புதிய டெர்மினல் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019ம் ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகளுக்குள் புதிய டெர்மினல் கட்டி முடிக்கப்பட்டு பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 02ம் தேதி அன்று திறந்து வைத்தார்.

ஒரே நேரத்தில் சுமாராக 3500 பயணிகள் கையாளலாம். புதிய டெர்மினல் 61 ஆயிரத்து 634 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடுக்காக 10 கேட்கள், வருகைக்காக 6 கேட்கள், 60 செக்-இன் கவுன்டர்கள், இமிகி ரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுண்டர்கள், 15 எக்ஸ்ரேமெஷின்கள், 3 விஐபி லவுஞ்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணி களின் உடமைகளை எடுத்து வர சாய்வுதள கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட உள்ளது. அதிநவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்புகோபுரம் மூலம் ரன் வேயின் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்.

சுற்றுச்சூழலை பாதிக்காத விமான நிலைய முனையமாக 4 ஸ்டார் கிரேடு தரம் பெற்றுள்ளது இரண்டாவது முனையம். இந்தியாவிலேயே முதல் முதலாக 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்ற முதல் விமான நிலைய முனையம். மேலும் கழிவு நீரை ஒரு சொட்டு கூட விமான நிலையத்தை விட்டு வெளியேற்றாமல் மறுசுழற்சி மும்பை ஐஐடியின் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்

இரண்டு அடுக்கு விமான விமான நிலையமாக முனையமாக உள்ளது விமான நிலைய மேற்கூரை மற்றும் சுவர்கள் மூலம் மூன்று 3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் விமான நிலையம் முனையம் அதாவது பசுமை விமான நிலைய முனையம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் வருகிற 11ஆம் தேதி காலை 06:00 மணி முதல் செயல்பட உள்ளது.

ஏற்கனவே உள்ள பழைய முனையம் 11ஆம் தேதி காலை 05:00 மணிக்கு மூடப்படும். காலை 06:00 மணிக்கு புதிய இரண்டாவது முனையம் செயல்படு துவங்கும். 06:40 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து வரும் விமானம் முதலில் தரையிறங்கும். திருச்சியில் இருந்து கொழும்புவிற்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் காலை முதல் விமானமாக புறப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையத்தில் வருடத்திற்கு 4.5 மில்லியன் (45 லட்சம்) பயணிகளை கையாள முடியுமாம். ஒட்டுமொத்தமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முனையம் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி அசத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision