கண்ணீர் புகை குண்டை வீசி, வஜ்ரா வாகன மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீசார்
திருச்சி மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வாராந்திர கவாத்து மற்றும் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கையாளும் (MOB OPERATION) ஒத்திகை நடத்தப்பட்டது.
இன்று (31.08.2024)-ந் தேதி திருச்சி மாநகரில் எதிர்வரும் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கு சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை எப்படி கையாள்வது என்ற ஒத்திகையுைம் (MOB Operation), அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்வது உள்ளிட்ட ஒத்திகையானது திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்பார்வையில்
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் என 575 நபர்களை கொண்டு தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேற்படி ஒத்திகை நிகழ்ச்சியின் போது துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் துணை ஆணையர், (ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இதுபோன்ற சட்டவிரோத கூட்டத்தை கையாளும் ஒத்திகையின்போது, திருச்சி மாநகர காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision