டீ கடையில் 1000 மதுபாட்டில்கள் பறிமுதல். மாமனார் மற்றும் மருமகன் கைது.

டீ கடையில் 1000 மதுபாட்டில்கள் பறிமுதல். மாமனார் மற்றும் மருமகன் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சபெருமாள்பட்டி கிராமம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (54). இவர் அந்த ஊரில் டீக்கடை நடத்தி வருகிறார். ஊரடங்கு  அமலில் உள்ளதால் அரசு மதுபான கடைகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக திறக்கப்படவில்லை.

இந்நிலையில் முருகேசன் தனது டீக்கடையில் அரசு மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து முருகேசன் கடைக்குச் சென்று தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது முருகேசனும் அவருடைய மருமகனான  பாலசுப்ரமணியனும் சேர்ந்து தங்களது டீக்கடையில் அரசு மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த 989 குவார்ட்டர் மது பாட்டில்களையும், 57 பீர் பாட்டில்களையும் மது விற்று வைத்திருந்த ரொக்கப்பணம் ரூபாய் 11,750 யையும் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் பிடித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் மாமனார் மற்றும் மருமகன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx