திருச்சியில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை
திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ரமலான் கொண்டாட்டத்தில் சிறப்பு தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை அன்பை பரிமாறிக் கொண்டனர்.
பக்ரீத் பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான பக்ரீத் பெருவிழா மாநகரில் 101 பள்ளிவாசல்களிலும், 28 திறந்த வெளி மைதானங்களிலும் மற்றும் ஒரு உள்ளரங்கத்திலும் கூட்டு தொழுகை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் சிறப்பாக பண்டிகையை கொண்டாடவும், குற்ற சம்பவம் ஏதும் நிகழாமல் தடுக்கவும் 129 வழிபாட்டு இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர 14 ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விழிப்புடன் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டுமெனவும், 9 சோதனை சாவடிகளில் போதுமான காவலர்கள் பணியிலிருந்து விழிப்புடன் பணிபுரிந்தனர்.
முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு ஒரு உதவி ஆணையர் மேற்பார்வையில் 10 போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் 89 ஆளினர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இதற்காக திருச்சி மாநகரம் முழுவதும் மாநகர காவல் ஆணையர் சத்திய ப்ரியா தலைமையில், 2 காவல் துணை ஆணையர்கள், 7 காவல் உதவி ஆணையர்கள், 38 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் திரட்டப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஈடுப்படுத்தப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn