பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிறப்புரையாற்றினார்

பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிறப்புரையாற்றினார்

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறையில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலக்ஷ்மி ஜெகதீசன், "அண்ணாவின் கொடைகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 45 நிமிடங்கள் நீண்ட உரையில் ஞாபக பிசிறு, குரலில் பிசிறு, சொற்களுக்கு இடையே  தடுமாற்றமோ மற்றும் எந்தவொரு தொய்வும் இல்லாமல் அண்ணாவின் கருத்துச் செறிவோடு கலைஞர்   நினைவுகளோடு சுப்புலட்சுமி ஜெகதீசன் உரையாற்றினார்கள்.

அறிஞர் அண்ணாவின் சாமானிய பிறப்பு, சாதித்த வாழ்வு குறித்து திராவிட கருத்துக்களை அவர்களுக்கே உரித்தான பாணியில் மிக அழகாக மாணவர்களிடையே கொண்டு சேர்த்தார். அறிஞர்களின் வரலாறுகளையும் தலைவர்களின்  புத்தகங்களையும் படித்துத் அறிவை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொண்டார். அம்மையார் சுப்புலட்சுமி ஜெகதீசன் கேட்டுக்கொண்டதற்கிணங்க வரலாற்றுத் துறையின் மூன்றாம் ஆண்டு இளங்கலை மூன்றாமாண்டு மாணவன் சங்கர் அறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிட கழகத்தின் கொள்கைகளை குறித்தும் எழுச்சி உரையாற்றினார்.

இந்த விழாவில்  மன்னை நாராயணசாமி பேரன், திமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பொறியாளர் மன்னை  சோழராஜன், மனைவி மகேஸ்வரி சோழராஜன் கொள்ளுப் பேரன் அருண்மொழிவர்மன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்த விழாவிற்கு மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவர்கள் நேரிலும், மற்ற ஆண்டு மாணவர்கள் காணொளி மூலமாகவும் பங்கேற்றனர்.

விழா ஏற்பாட்டினை பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத்துறை  செய்திருந்தது. விழாவில் துறைத்தலைவர் முனைவர் ஃபெமிலா அலெக்சாண்டர் வரவேற்புரை வழங்கினார். இணைப் பேராசிரியை முனைவர் எலிசபெத், உதவி பேராசிரியர்கள் மனுநீதி, தீபன் ராஜ், நிறைமதி, மற்றும் ஜஸ்டின் கலந்து கொண்டனர். இணைப்பேராசிரியர் த.அருளானந்து நன்றியுரையுடன் விழா இனிதே சிறப்பாக முடிந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn