தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் - திருச்சி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் - திருச்சி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழ் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிவார் என தகவல் வெளியாகி இருந்து. என்ன அறிவிப்பு என தமிழக வெற்றி கழக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழக கட்சியை அங்கீகரித்து உள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதே போல திருச்சி திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக V.L. சீனிவாசன் தலைமையில் திருச்சி காந்தி மார்கெட் ஆர்ச் பகுதி அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

திருச்சி தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழக கொடியை ஏந்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision