பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த  தமிழக அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் 65-வதுபொதுக்குழு திருச்சியில் 07.05.2022இன்று நடைபெற்றது.இப்பொதுக்குழுவில் தமிழகமெங்குமிருந்து சுமார் 500 பொறியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தினைக் சங்கத்தின் மாநில தலைவர் பொறிஞர்.சு.கண்ணன் தலைமையேற்று நடத்தினார்.திருச்சி வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளரும் சங்கத்தின் தேர்தல் குழு தலைவரான பொறிஞர். முனைவர். இரா. கிருஷ்ணசாமி பொதுக்குழுவில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

இந்திய நாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிட அல்லும் பகலும் அயறாது உழைத்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு செய்துள்ளதை எண்ணி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இதற்காக தமிழக அரசிற்கு இப்பொதுக்குழு மகிழ்ச்சியுடன் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக வளர்ச்சியில் பொறியாளர்களின் பங்களிப்பினையும் பொறியாளர்களின் அர்ப்பணிப்பையும் நன்கு அறிந்திருந்த மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பொறியாளர்கள் அனைவருக்கும் 2010ஆம் ஆண்டு ஊதியத்தினை உயர்த்தி வழங்கினார். கலைஞர் அவர்கள் வழங்கிய ஊதியத்தை பின்னால் அமைந்த அரசு குறைத்து வழங்கியது. அரசு அலுவலர்கள் அனைவரும் ஏழாவது ஊதியக்குழு பயன்களைப் பெற்று வரும் நிலையில் பொறியாளர்கள் மட்டும் இன்றும் ஆறாவது ஊதியக்குழுஊதியமே பெற்று வருகிறோம். எனவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கிய ஊதியத்தின் அடிப்படையில் 7வது ஊதியக்குழு ஊதியத்தினைப் பொறியாளர்களுக்கு விரைவில் வழங்கிடுமாறு தமிழகஅரசைஇப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. 

 

 01.04.2003முதல்பணியில்சேர்ந்தஅலுவலர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை (Contributory Pension Scheme) இரத்துச் செய்து, விரைவில் அனைத்து அலுவலர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி ஆணை வழங்குமாறு தமிழக அரசு வழங்கவேண்டும் 

தமிழ்நாடுநெடுஞ்சாலைத் துறையின் 75-வது ஆண்டு பவள விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து 75வது ஆண்டு பவள விழா நினைவுத் தூணினை திறந்து வைத்தும், விழா மலர் மற்றும் பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டதும் ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. 

இதற்காக மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர்அவர்களுக்கு இப்பொதுக்குழு மனதார நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் வேண்டுகோளினை ஏற்று நெடுஞ்சாலைத்துறையின் 75வது ஆண்டு பவள விழா நிகழ்ச்சியினை தலைமையேற்று மிக சிறப்பாக நடத்தி தந்தமைக்கு மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு இப்பொதுக்குழு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

இப்பொதுக்குழுவில் மேலே கூறப்பட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO