நடராஜபுரம் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

நடராஜபுரம் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியை திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் தொடங்கி வைத்து ஜல்லிகட்டு வீரர்களை உறுதிமொழி எடுக்க செய்தார்.

இந்த ஜல்லிகட்டு போட்டியில் துளசி மகாநாட்டை சேர்ந்த பழங்கனாங்குடி மாரியம்மன் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதன்பிறகு துவாக்குடி, நடராஜபுரம் கோவில் மாடும் அவிழ்த்த பிறகு அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.

மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700 ஜல்லிக்கட்டு காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு உள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் வீரர்களுக்கும் சேர், அண்டா, சைக்கிள் பரிசுகள் வழங்கப்படுகிறது.

திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், காயம் அடைந்தவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ உதவியும் அளித்தனர்.

திருச்சி கால்நடை இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா  தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதியுடன் இருப்பதாக என்பது குறித்து சோதனை செய்தனர். திருவெறும்பூர் பொறுப்பு டிஎஸ்பி ஜெயசீலன் தலைமையிலான 137 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO