மாவட்ட அளவிலான சவ்வரிசி உற்பத்தி வழிகாட்டுதல் கூட்டம்

மாவட்ட அளவிலான சவ்வரிசி உற்பத்தி வழிகாட்டுதல் கூட்டம்

 மாவட்ட அளவிலான சவ்வரிசி (SAGO) உற்பத்தி வழிகாட்டுதல் கூட்டம் ,சவ்வரிசி (Sago) உற்பத்தியில் முறையான தரமான தயாரிப்பு மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் S.சிவராசு தலைமையில் நேற்று மாலை 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைமையாக கொண்டு இயக்குனர், கூடுதல் ஆணையர், துணை தலைவர், மாவட்ட நியமன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், சுற்று சூழல் பொறியாளர் Sago Serve Society மேலாளர், சவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு வழிகாட்டுதல் குழு இன்று அமைக்கப்பட்டது.

இந்த சவ்வரிசி வேதியியல் பொருட்கள் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், PH அளவை 4.5 முதல் 7-இற்குள் இருக்க வேண்டும் என்றும், தயாரிக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படவேண்டும் என்றும், தயாரிப்பாளர்கள் தன்சுத்தம் மற்றும் கையுறை, தலையுறை அணிந்திருக்கவேண்டும் என்றும், உற்பத்தி செய்யப்பட்ட சவ்வரிசி அதன் சவ்வரிசி சொசைட்டி மூலம் மூலம் தரத்தினை ஆய்வு செய்த பிறகே விற்பனை செய்யவேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கூறப்பட்டது.

இந்த கூட்டத்தில் உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் S.சிவராசு தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் திரு.லட்சுமி அவர்கள் சேலம் Sago துறையிலிருந்து கண்காணிப்பாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை உணவு பாதுகாப்பு துறைமாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு MBBS மற்றும் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO