வீடுகளுக்கே சென்று கழிவுகள் சேகரிக்கும் புதிய முறையை முன்னோட்டம் செய்துள்ள திருச்சி மாநகராட்சி

வீடுகளுக்கே சென்று கழிவுகள் சேகரிக்கும் புதிய முறையை முன்னோட்டம் செய்துள்ள  திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில்  உள்ள குப்பைகளை அகற்றுவதில்  முறையாக செயல்படவில்லை என்று பல தரப்பினரும், குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டியததை அடுத்து தற்போது அதனை சரி செய்வதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்து உள்ளது   மாநகராட்சி நிர்வாகம். 65 வார்டுகளில் ஒன்றில் நெறிப்படுத்தப்பட்ட கழிவு சேகரிப்பு பொறிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. செயல்பாட்டு விளைவுகளின் அதனடிப்படையில் மீதமுள்ள வார்டுகளில் பின்பற்றப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தற்போது மாநகரம் முழுவதும் ஒரு நாளைக்கு 320 முதல் 350 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் தினசரி வீடுகளிலேயே கழிவுகளை சேகரித்து வந்தனர். ஆனால் முறையாக அதனை பின்பற்றாததால் கழிவுகளையும், குப்பைகளையும் சாலைகளில் பொதுமக்கள் வீசிச் செல்லும் சூழல் ஏற்பட்டது. 

பலமுறை புகார்களுக்கு பிறகு பைலட் திட்டத்திற்காக அரியமங்கலம் மண்டலத்தில் வார்டு எண் 23 மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. வார்டில் 30 சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் 100 வீடுகள் உள்ளடக்கம் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிக்க சுமார் 6 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணியாளர்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து கழிவுகளை சேகரித்து முடிக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட கழிவுகளை தெரு மூலைகளில் வைக்க வேண்டும். அங்கிருந்து லாரிகளால் அவற்றை அகற்றும் பணி நடைபெறும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீட்டு வாசலில் கழிவுகள் சேகரிப்பு மினி லாரிகள் மூலம்  60 சதவீதம் வீடுகளில் மட்டுமே உள்ளடக்கியது. இந்த திட்டத்தை பரிந்துரைத்த திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட கழிவு சேகரிப்பு தொடர அறிவுறுத்தி உள்ளார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 

குடியிருப்பாளர்களை எச்சரிக்கும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு விசில் வழங்கப்படுகிறது. குடியிருப்பாளர்கள் மக்கும் மற்றும் மக்காத இரண்டு தனித்தனி தொட்டிகளில் கழிவுகளை கொட்டுமாறு கூறப்பட்டுள்ளது. தவறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் இருவரும் கழிவுகளை சேகரிப்பதற்கான அணிகளாக செயல்படுவார்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve