9 இடங்களில் நம்பர் பிளேட்டுக்களை கண்டறியும் கண்காணிப்பு கேமரா - மாநகர காவல் ஆணையர் பேட்டி

9 இடங்களில் நம்பர் பிளேட்டுக்களை கண்டறியும் கண்காணிப்பு கேமரா - மாநகர காவல் ஆணையர் பேட்டி

திருச்சி மாநகர் கே.கே.நகர் ஆயுதபடை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில், தொலைந்து போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கலந்து கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட 137 செல்போன்களில் 96 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தார்.

அப்போது துணை ஆணையர்கள் செல்வகுமார், விவேகானந்த சுக்லா மற்றும் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.  பின்னர் போலீஸ் கமிஷனர் காமினி நிருபர்களிடம் கூறும்போது.... திருச்சி மாநகரில் தொலைந்து போன 137 செல்போன்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி மாநகரில் நடந்த வழிப்பறி கொலை சம்பவத்தில் 22 வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வீட்டின் பூட்டை உடைத்த 19 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை திருச்சி நகரில் 55 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் உள்ள 9 சோதனை சாவடிகளில் வாகனங்களில் நம்பர் பிளேட்டுக்களை கண்டறியும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகரை பொறுத்தவரை 860 கண்காணிப்பு கேமராக்கள் சாலைகள் மட்டும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களும், வியாபாரிகளும் அந்தந்த பகுதிகளில் போலீசார்ருடன் ஒத்துழைப்பு நல்கி கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும் என கமிஷனர் காமினி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision