தமிழ்நாடு கட்டுமான நலவாரிய பதிவுரு எழுத்தர், ஓட்டுநர் பணிக்கு இன்று நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு திடீரென ஒத்தி வைப்பு

தமிழ்நாடு கட்டுமான நலவாரிய பதிவுரு எழுத்தர், ஓட்டுநர் பணிக்கு இன்று நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு திடீரென ஒத்தி வைப்பு

தமிழ்நாடு கட்டுமான நலவாரிய பதிவுரு எழுத்தர், ஓட்டுநர் பணிக்கு இன்று நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு திடீரென ஒத்தி வைக்கபட்டது.

தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் திருச்சி தொழிலாளர் நல உதவி ஆணையர்  அலுவலகத்தில்  காத்திருக்கின்றனர்.70 இடங்களுக்கு தமிழகம் முழுவதும் திருச்சியில் 2 இடத்திற்க்குமான நேர்முக தேர்விற்கு மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வந்தவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ₹ 500 கட்டணமாக விண்ணப்பித்தும், அழைப்புக் கடிதம் அனுப்பியும் திடீர் தேர்வு ரத்தால் மனவேதனையுடன் உள்ளதாக தேர்வுக்கு வந்தவர்கள் கூறினர். கடைசி நேரத்தில் முறைகேடு செய்ய திட்டம் என்றும் குற்றச்சாட்டையும் முன் வைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH