நாங்கள் எல்கேஜி படித்தாலும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் - அன்புமணி க்கு திருமாவளவன் பதில்

Thirumavalavan Anbumani

நாங்கள் எல்கேஜி படித்தாலும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் - அன்புமணி க்கு திருமாவளவன் பதில்

நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் -அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில்

திருச்சியில் இருந்து திருவாரூருக்கு செல்லும் போது திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்...

தேர்தல் அரசியலோடு தொடர்பில்லாத சமூக பொறுப்பை உணர்ந்து  முன்னெடுக்கிர  மாநாடு பல்லாயிர கணக்கான பெண்கள் துன்பத்தில் இருந்து வருகிறார்கள். நமக்கு தெரிந்தது கள்ளகுறிச்சி மரக்காணம் தான்.. ஆனால் இந்திய அளவில் கிராமங்களில் போதைக்கு அடிமையாகி இளம் வயதில் உயிரிழப்பு கணக்கிட முடியாத அளவில் உள்ளது. 

தமிழ்நாட்டிலும் பெரும் எண்ணிக்கை உள்ளது

கள்ளக்குறிச்சியில் மரக்காணத்திலும் குடும்பங்களை சந்தித்தபோது அந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கூறினர்.


அப்படி பாதிக்கப்பட்ட பெண்களில் அவலத்தை பற்றி பேசுவதற்கு பதிலாக தேர்தல் அரசியல் கூட்டணி அரசியல் என்று திசை திருப்புகிறார்கள் திரித்து பேசுகிறார்கள் இது வேதனை அளிக்கிறது.

எங்களை பொறுத்தவரை நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம் தொடர்கிறோம் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்த மாநாட்டில்  சமூக பொறுப்பு உடைய   யார் வேணாலும் பங்கேற்கலாம் அதிமுகவும் பங்கேற்கலாம் என்கின்ற அறைகூவலை நாம் ஒன்று படுவோம் என கூறுவதற்கு பதிலாக இவர் என ஆதிமுகவிர்க்கு அழைப்பு கொடுத்தார் என பிரச்சனையை திசை திருப்புவது பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரின் உணர்வுகளை அவமதிப்பதாக உள்ளது.

எல்லோரும் குரல் கொடுத்தான் மதுபான கடைகள் மூடா எந்த சிக்கலும் இருக்காது 


காவேரி, ஈழ பிரச்சினை போன்றவற்றிக்கு எல்லோரும் சேர்ந்து குரல் கொடுப்பது  போல, மது மற்றும் போதை ஒலிப்புக்கு எல்லோரும் சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.

இதில் ஏன் திமுக அதிமுக கலந்து கொள்ள வேண்டும் என்கிறான் என்றால்,

மது ஒழிப்பு மற்றும் போதை பொருள் தொடர்பாக தேசிய கொள்கை வரையறுக்க பட வேண்டும் என்பதால்  திமுக சேர்ந்து அழுத்தம் கொடுத்தால் தான் இது நிகழும். 

எல்லோரும் சேர்ந்து அழுத்தம் கொடுத்தால் தான் தேசிய அளவிலான போதை ஒழிப்பு கொள்கையை உருவாக்க முடியும்.

நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் -அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதில்.

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே விசிகவின் முழக்கம் இது
இயல்பான விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான குரல்.

2026 திமுக தேர்தல் கூட்டணியின் போது அழுத்தம் வைப்பது குறித்து முடிவெடுப்போம்.

இதை ஏன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடாக பார்க்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் இதை முன்னெடுக்கிறோம் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.

தேர்தல் அரசியலை அவரவர் வசதிக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம்.

இது ஒரு சமூகப் பிரச்சனை உள்ள விஷயம்,
வெறும் அரசியல் கணக்கு போட்டு பார்ப்பது இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது.

போதைப் பொருட்கள் பெருகி வருவது தேசத்தின் மனித வளத்தை பாழாக்குகிறது.


எக்ஸ் வலைதள பக்கத்தில் அட்மின் பதிவிட்ட பதிவில் திருத்தம் இருந்த நிலையில், அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் என் அனுமதியுடன் திருத்தம் செய்யப்பட்டு பதிவிடப்பட்டது.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு  என்பது நாங்கள் தேர்தல் அரசியலில் அடி வைத்த காலம் முதல் இதனை முழக்கமாக வைத்து வருகிறோம்.


கடந்த காலங்களிலும் கூட்டணியில் இருந்து கொண்டே மக்களின் பிரச்சினைக்காக எதிரணி கூட்டணியில் உள்ளவர்களுடன் இணைந்து செயலாற்றி இருக்கிறோம். அதற்கு பல சான்றுகள் உள்ளது.

பாமக விமர்சிக்கவில்லை, எங்களது முன்னெடுப்பை வரவேற்றுதான் பேசியுள்ளார்கள்.

பாமகவை பற்றி நான் சொல்லக்கூடிய கருத்தை பற்றி தான் கண்டித்து உள்ளார்கள் அப்படி சொல்ல வைத்தது அவர்கள் தான்.

முதன் முதலில் சிதம்பரத்தில் நான் தேர்தலில் நின்ற போது வன்முறையை தூண்ட காரணம் அவர்கள் தான்.

நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை நாங்கள் காயப்படுத்தப்பட்டோம் தமிழர் நலனுக்காக நாங்கள் ரத்த கரையுடன் கை குலுக்கினோம். தலித் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக என்பதை மறுக்க முடியாது அதைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்.

அவர் மது ஒழிப்பு குறித்த கருத்தில் நிலைப்பாடாக இருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் எங்களால் அப்படி இணைந்து பயண பட முடியாது.

தேர்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டை இணைத்து பார்ப்பதாலே இவ்வளவு சர்ச்சை வருகிறது. இதை சமூக நலனுக்கானதாக பார்க்க வேண்டும்.

100% தூய நோக்கத்தோடு இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம் இதில் எந்த ஒரு அரசியல் கணக்கும் இல்லை.

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே எங்களின் முழக்கமாக உள்ளது. இந்த முழக்கம் என்பது
இயல்பான விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான குரல்.

2026 தேர்தலில் திமுகவிடம் இது குறித்த அழுத்தம் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு அது தேர்தல் நேரத்தில் தெரியவரும் என்றார்.

ஆளுகின்ற திமுக அரசின் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு தொடர்பான கோரிக்கையை அவர்களிடம் முன்வைக்குமா என்ற கேள்விக்கு அது குறித்து இனி தான் முடிவு எடுக்கப்படும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை

வாட்ஸ் அப் மூலம்

அறிய... https://chat.whatsapp.com/IpuT

LRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும்

அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision