வழக்கை சந்திக்க தயார் திருச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேட்டி

திருச்சியில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து புத்தூர் நால்ரோட்டில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வருமான வரி 3 கோடி ரூபாய்க்கு மேல் பிச்சை போடுகிறேன். ஒன்றிய அரசான மோடி அரசுக்கு பிச்சை போடுகிறேன். இதே போல் அமைச்சர்களும் பிச்சை போடுகிறார்கள் என பேசினார்.
இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில்
தேசிய செயற்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன்
சட்டமன்ற உறுப்பினர் பேசியதை கண்டிப்பதோடு அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அவர் அதில் இரண்டு அமைச்சர்களை ஒரு மேல் பேசி உள்ளார் அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் பழனியாண்டி மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளது அது மட்டுமல்லாமல் இப்படி இவர் பேசியதற்கு அமலாக்கத்துறை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று திருச்சி பஞ்சப்பூரில் டைட்டில் பார்க் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்
பழனியாண்டியிடம்
செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது வழக்கை சந்திக்க தயார் என கூறிவிட்டு சென்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision