திருச்சியில் பழங்கால கற்சிலை கண்டெடுப்பு -ஆச்சரியம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 9 அடி உயரமும் 2 அடி அகலம் உள்ள பழமையான கற்சிலை ஒன்று தென்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கற்சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் கோவில் நுழைவாயிலில் அமைக்கப்படும் துவாரபாலகர் கற்சிலை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து இந்த கற்சிலையை மீட்டு தொல்லியல் துறையினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் கற்சிலையை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision