திருச்சியில் வழக்கறிஞர் மகன் அடாவடி - காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

திருச்சியில் வழக்கறிஞர் மகன் அடாவடி - காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

திருச்சி மணப்பாறை நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவராக மோகன்தாஸ் இருந்து வருகிறார்.15.02.2025 இரவு சுமார் 9 மணி அளவில் குளித்தலை பிரிவு ரோடு அருகே உள்ள டீக்கடை முன்பு வழக்கறிஞர் மோகன் தாஸ் மற்றும் அவரது மகன் தீபன் ஆகியோர் அசிங்கமாக பேசி மூடி இருந்த டீக்கடையின் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வீசி பொருட்களை சேதப்படுத்தி,

தகவல் அறிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது கற்களை வீசியும், காவலர் வினோத் குமார் என்பவரின் தலைக்கவசத்தை உடைத்தும் தடுக்கச் சென்ற தலைமை காவலர் பாஸ்கர் என்பவரின் பின் தலையில் கையால் அடித்துள்ளனர்.

இச்சம்பவத்தை மறைத்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல்

இருந்துள்ளனர்.இதையடுத்து

காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி சரக டிஜஜி வருண்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மணப்பாறை காவல் ஆய்வாளர் குணசேகரன், உதவி ஆய்வாளர் தினேஷ் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி சரக டிஜஜி வருண்குமார் உத்தரவின் பேரில் இரவு நேரத்தில் மது போதையில் தகராறு செய்து காவலர்களை ஆபாச வார்த்தையில் பேசி ரகளையில் ஈடுபட்ட தீபன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர் தீபன் மீது வழக்குப்பதிந்து கைது செய் துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision