திருச்சி விமான நிலைய ஓடு பாதை அருகே ஆபத்தான திமுக கொடி கம்புகள்- துணை முதல்வரை வரவேற்க விதிமீறிய திமுகவினர்

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் அதே போன்று திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது.
விமான நிலைய புதிய முனையம் கட்டப்பட்டது முதல் விமான சேவையும் அதிகரித்துள்ளதுடன் விமான பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே திருச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்று இரவு விமானம் மூலம் திருச்சி வருகை தரவுள்ள உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக திருச்சி விமான நிலையம் முதல் கண்ட்டோன்மென்ட் வரையிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையின் நடுவே திமுக கொடிகம்பங்கள் நட்டு வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதேநேரம், சர்வதேசவிமானநிலைய ஓடுபாதைக்கு இடையூறாக ஓடுபாதை அமைந்துள்ள பகுதிகளின் சாலைகளிலும், உயரமான கொடிக்கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். திமுகவினர். ஓடுபாதை அமைந்துள்ள பகுதிகளில் விமானம் இறங்குவதற்கு இடையூறு ஏற்படாமல் தெருவிளக்குகள் கூட உயரம் குறைவாகவே நிறுவப்பட்டு உள்ள நிலையில் திமுகவினர் அந்த தெருவிளக்குகளின் உயரத்தையும் தாண்டி இருமடங்கு உயரத்தில், உதயநிதி ஸ்டாலினை வரவேற்க விமானநிலைய விதிமுறைகளைமீறி திமுக கொடிகம்பங்களை கட்டிவைத்துள்ளனர்.
இதனால் விமானம் இறங்கும்போது கொடிகம்பத்தில் மோதி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை அகற்ற வேண்டும் என்பது அனைவரது கோரிக்கை யாக உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision