திருச்சி மாநகரில் நாளை (12.12.2024) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (12.12.2024) (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மத்திய சிறைச்சாலை பகுதி, இந்திரா நகர்,
கொட்டப்பட்டு, மொராய்ஸ் கார்டன், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவ நகர், பென்சனர் காலனி, ஈ.வெ.ரா. கல்லூரி ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் திருச்சி தில்லைநகர் பகுதியில் மாநகராட்சியால் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (12.12.2024) (வியாழக்கிழமை) காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தில்லைநகர் முதல் கிராஸ், (மேற்கு) 2-வது கிராஸ், 3-வது 5 கிராஸ், சாஸ்திரிரோடு வட கிழக்கு விஸ்தரிப்பு, 1 முதல் 5 - கிராஸ் வரை,
தேவர் காலனி, 5 சாலைரோடு கிழக்கு (தில்லைநகர் சந்திப்பு முதல் 5 மாரீஸ் மேம்பாலம் வரை), மலைக்கோட்டை காலனி, கரூர் பைபாஸ்ரோடு, அண்ணாமலைநகரில் ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision