மூச்சு குழாயில் சிக்கிய கணுக்கால் கொலுசு திருகு - ரிஜெக்ட் ப்ராங்கோஸ்கோப்பின் மூலம் எடுத்த அரசு மருத்துவர்கள்

மூச்சு குழாயில் சிக்கிய கணுக்கால் கொலுசு திருகு - ரிஜெக்ட் ப்ராங்கோஸ்கோப்பின் மூலம் எடுத்த அரசு மருத்துவர்கள்

பெரம்பலூர் மாவட்டம் எருதுபட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் (13.12.2024) அன்று காலை கணுக்கால் கொலுசு திருகை தனது வாய் வழியாக போட்டுக் கொண்டான். உடனே அவனை இலுப்பூர் மருத்துவமனைக்கும் கூட்டி சென்று அங்கு அவனுக்கு ஊடுகதிர் படங்கள் எடுத்து பார்த்ததில் அது வலது பெரும் மூச்சு குழாய்க்கு சென்று தங்கி உள்ளது தெரியவருகிறது.

உடனே அந்த சிறுவனை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தொண்டை மருத்துவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவனுக்கு தேவையான காது, மூக்கு உடனடியாக மயக்கம் கொடுக்கப்பட்டு, உறுதியான உள்நோக்கி (Rigid Bronchoscope) மூலம் அந்த கொலுசு திருகு அகற்றப்பட்டது. தற்சமயம் சிறுவன் நலமுடன் இருக்கிறார்.

அந்த திருகை அங்கே விடப்பட்டிருக்குமானால் அது இன்னும் சேய்மையாக சென்று மற்ற பகுதிகளுக்கு தொற்று போன்றவற்றை ஏற்படுத்தலாம். இந்த சிகிச்சை மருத்துவமனை முதல்வர் பேரா.மரு.குமரவேல் MS.Ortho., D.Ortho., DNB Ortho., Ph.D., ACME, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பேரா.மரு.ராதாகிருஷ்ணன், MS.,

உதவி பேராசிரியர் மரு.அண்ணாமலை, MS., மயக்கவியல் துறை பேராசிரியர் மரு.செந்தில் குமார் மோகன், MD., ஆகியோர் கொண்ட குழு அந்த வலது பிரதான மூச்சு குழாயில் இருந்து திருகை ரத்தப்போக்கு, மூச்சு விடுதல் சிரமம் இல்லாமல் ரிஜெக்ட் ப்ராங்கோஸ்கோப்பின் மூலம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.

இது தவிர இது போன்ற சிறு பொருட்களை தரையில் போட்ட நிலையில் குழந்தைகளை விளையாட விடுவது ஆபத்து. இது போன்ற போருட்களை இல்லாமலும் அடிக்கடி தரை சுத்தமாக பெருக்கி வைப்பதும், வீட்டில் உள்ளவர் செய்யக்கூடியவை ஆகும்.

குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உணவு உண்பதை தவிர்ப்பது, படித்துக் கொண்டே உணவு உண்பதை தவிர்ப்பது ஆகியவை பின்பற்றினால் குழந்தைகளை இவ்வாறு மூச்சு குழாயில் வெளி பொருட்கள், அன்னிய பொருட்கள் செல்வதை தவிர்க்கலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision