ஊழலுக்கு எதிரான புகார் - நடைமுறையில் இருக்கும் சட்டங்கள்!! பார்ட் - 2

ஊழலுக்கு எதிரான புகார் -  நடைமுறையில் இருக்கும் சட்டங்கள்!! பார்ட் - 2

நாட்டிற்கே பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஊழலை ஒழிக்க போராடும் தேசிய ஊழல் தடுப்பு இயக்கத்தின் தென்னிந்திய தலைவர் திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த சக்தி பிரசாத், தொடர்ந்து ஊழல் குறித்து இருக்கும் முக்கியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். தொடர்ந்து இந்தியாவில் பொது மற்றும் தனியார் துறைகளில் ஊழலை எதிர்த்துப் போராடும் நோக்கத்தில் பல சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன.

இதில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை பற்றி சென்ற வாரம் பார்த்திருந்தோம், அவற்றின் தொடர்ச்சி பினாமி பரிவர்த்தனைகள் தடை சட்டம், 1988 (The Benami Transactions (Prohibition) Act, 1988) இந்தச் சட்டம் பினாமி (ப்ராக்ஸி) பரிவர்த்தனைகளைத் தடை செய்கிறது. அவை பெரும்பாலும் பணமோசடி மற்றும் ஊழல் வழிகளில் பெறப்பட்ட சட்டவிரோத சொத்துக்களை மறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 

பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்க 2016 ஆம் ஆண்டு சட்டம் வலுப்படுத்தப்பட்டது. நிறுவனங்கள் சட்டம், 2013(The Companies Act, 2013) இந்தச் சட்டம் நிறுவன நிர்வாகத்திற்கான விதிகளையும் நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்புகளையும் தனித்தனியாக பிரிக்கிறது. தனியார் துறை நிறுவனங்களுக்குள் நிதி மோசடிகள் மற்றும் ஊழல் நடைமுறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் இதில் அடங்கும். 

விசில்ப்ளோவர் பாதுகாப்பு சட்டம், 2014(Whistleblower Protection Act, 2014) அரசு நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் மற்றும் தவறான செயல்களைப் புகாரளிக்கும் நபர்களைப் பாதுகாப்பதை விசில்ப்ளோவர் பாதுகாப்புச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பதவி நீக்கம், துன்புறுத்தல் அல்லது பலிவாங்கல் உள்ளிட்ட பதிலடிகளில் இருந்து விசில்ப்ளோயர்கள் பாதுகாக்கப்படுவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது. 

வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் (The Foreign Corrupt Practices Act - FCPA) இந்த சட்டம் அமெரிக்கச் சட்டமாக இருந்தாலும், இது வேற்றுநாட்டு எல்லையை தனக்குள்ளே கொண்டுள்ளது. இது சர்வதேச வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது அமெரிக்க நிறுவனங்கள் அல்லது அவற்றின் துணை நிறுவனங்கள், அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட, வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதில் ஈடுபடுவதைத் தடை செய்கிறது. 

இந்திய வணிகங்களை பொறுத்தவரை அவை இந்திய சட்டம் மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்பது விதியாகும். பணமோசடி சட்டம், 2002 (The Prevention of Money Laundering Act ) பணமோசடி தடுப்புச் சட்டம், பணமோசடியை குற்றமாக்குவதன் மூலம் சட்டவிரோதமான ஊழல் வருமானத்தை குறிவைக்கிறது. ஊழலுடன் தொடர்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும், ஊழல் நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மறைத்ததற்காக தனிநபர்கள் மீது வழக்குத் தொடரவும் இந்த சட்டம் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஒழுங்குமுறைகள் (SEBI) நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நிதிச் சந்தைகளில் ஊழலைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை செபி வகிக்கிறது, இது நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதுடன் உள் வர்த்தகம் மற்றும் மோசடி நடைமுறைகளை களைவதற்கு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இப்படி பல வலுவான சட்டங்கள் இருந்தபோதிலும், மெதுவான நீதி செயல்முறைகள் மற்றும் தாமதமான வழக்குகள், பயனுள்ள அமலாக்க வழிமுறைகள் இல்லாமை, அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளுக்குள் மாற்றத்திற்கு எதிர்ப்பு, விசில்ப்ளோயர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புயின்மை காரணமாக ஊழலை ஒழிப்பது பெரும் சிரமமாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision