இயற்கை அழகில் ஒளிந்திருக்கும் பாச்சில் அமளீஸ்வரர் கோவில் !!
பல வரலாற்று இடங்களை தன்னிடம் கொண்டுள்ள திருச்சி மாவட்டத்தில் மிக முக்கியமான, 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான கோவில் ஓன்று நொச்சியத்தை அடுத்த கோபுரப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. பாச்சில் அமளீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் இந்த சிவன் கோவில் கிபி 975 ஆம் ஆண்டு உத்தமசோழரால் கட்டப்பட்டது.
பல்வேறு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ள இந்த கோவிலில் கண்டராதித்த சோழரின் தேவியான செம்பியன்மாதேவி முதன்முதலில் நிவந்தம் கொடுத்துள்ளார், அதற்கான கல்வெட்டுகளும், முதலாம் ராஜராஜன், மற்றும் முதலாம் ராஜேந்திரனின் முக்கியமான கல்வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளதால், இந்த கோவில் வரலாற்று ஆய்வாளர்களின் விருப்பமான கோவிலாக உள்ளது.
குறிப்பாக ராஜராஜசோழர் பிறந்த ஐப்பசி சதயம் மற்றும் அவருடைய சகோதரி பிறந்த அவிட்ட நட்சித்திரம் போன்ற நாட்கள் பெரும் விழாவாக எடுக்கப்பட வேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கோஷ்ட சிற்பங்களுக்கு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வடபக்க சுவற்றில் இருக்கும் துர்க்கை சிற்பம் எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இதனை தவிர 2-3 இன்ச் அளவில் தூணில் செதுக்கப்பட்டிருக்கும் குழு நடன பெண்களின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர ராமாயண காட்சிகளும் சிற்பங்களும் இங்கு பிரசித்தி பெற்றது. எப்படி செல்வது : திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் சென்று அங்கிருந்து தனியார் வாகனங்களில் செல்லலாம். அல்லது திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல் செல்லும் பேருந்தில் ஏறி துடையூரில் இறங்கி பாச்சூர் வழியாக தனி வாகனத்தில் செல்லலாம்.
ஆனால் சொந்த வாகனத்தில் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வது சிறந்தது. தினமும் மாலை 4 மணியளவில் கோவில் திறக்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision