அமைச்சரின் வருகைக்காக கொட்டும் மழையில் அதிரடியாக போடப்பட்ட தற்காலிக சாலை.

அமைச்சரின் வருகைக்காக கொட்டும் மழையில் அதிரடியாக போடப்பட்ட தற்காலிக சாலை.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிறைவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக நவல்பட்டு காவிரி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலை கடையை அமைச்சர் இன்று திறந்து வைத்தார். முன்னதாக மழையினால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கப்பட்ட சாலையை அமைச்சரின் வருகைக்காக கொட்டும் மழையில் திடீரென கான்கிரீட் மிக்ஸுகளை கொட்டி தற்காலிக சாலை அமைக்கும் பணியானது நடைபெற்றது.

நீண்ட காலமாக அந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் அமைச்சரின் வருகைக்காக மட்டும் தற்காலிக சாலை அமைப்பதால் எந்த பயனும் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் தரமான தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision