30 ஆண்டுகளுக்கு மேலாக வசதி இல்லாததால் சாலையில் நடவு செய்த பெண்கள்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரகுடி ஊராட்சி உள்ளது. எரகுடி கிராமத்தில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது இந்த சாலையில் தொடர் மழை காரணமாக நடந்து செல்ல முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வயதானவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை அமைத்து தர வேண்டி பலமுறை அரசு அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள மண் சாலையில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நெல் நாற்று நட்டு எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision