ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்குள் வாக்குவாதம் தள்ளுமுள்ளு
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா - கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நம்பெருமாளை தரிசனம் செய்து செல்வர்கள்.
அதன்படி புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையான இன்று 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்திற்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் திரளாக வருகை தந்து நம்பெருமாளையும், அதனை தொடர்ந்து தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டனர்.
ஸ்ரீரங்கம் கோவிலிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் பக்தர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. மேலும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை ஏராளமான பக்தர்கள் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO