திருச்சியில் இருசக்கர வாகனங்கள் ஏலம் ஒத்திவைப்பு

திருச்சியில் இருசக்கர வாகனங்கள் ஏலம் ஒத்திவைப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைப்பற்றப்பட்ட 42 இரண்டு சக்கர வாகனங்களை திருச்சிராப்பள்ளி, சுப்ரமணியபுரத்திலுள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் (23.12.2023)-ம் தேதி காலை 10:30 மணிக்கு பொது ஏலம் விடப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணமாக பொது ஏலம் தற்சமயம் ஒத்திவைக்கபட்டுள்ளது.

மேலும் வருகின்ற (27.12.2023)-ம் தேதி காலை 10.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம், உதவி ஆணையர் கலால் மற்றும் மண்டல துணை இயக்குநர். அரசு தானியங்கி பணிமனை ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் கோர விருப்பம் உள்ளவர்கள் டெபாசிட் (முன்வைப்புத்தொகை) தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,000/-ம் செலுத்தி ஏலம் கோர வேண்டும். ஏலத்தொகையுடன் தனியாக சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்த வேண்டும்.

ஏலம் கோர விரும்புவோர் நேரில் ஆஜராகி ஏலம் எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி ஏலம் எடுக்க விரும்புவோர் திருச்சிராப்பள்ளி, சுப்ரமணியபுரத்திலுள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் (27.12.2023)-ம் தேதிக்கு முன்னதாக வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision