கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து 300 கோடிக்கு மேல் ஏமாற்றியதாக - ஐஜியிடம் புகார்

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து 300 கோடிக்கு மேல் ஏமாற்றியதாக - ஐஜியிடம் புகார்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு அர்ஜுன் கார்த்திக் என்பவர் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாக கூறுகின்றனர். இந்நிறுவனத்தின் கிளைகள் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன.

ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 18 மாதங்களுக்கு 15,000 வட்டி. இதே தொகை 24 மாதங்களுக்கு செலுத்தினால் பத்தாயிரம் ரூபாய் வட்டி ஒரு கிராம் தங்க நாணயம் என்ற திட்டம். இரண்டு லட்ச ரூபாய் செலுத்தினால் ஐந்து ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வட்டி, இரண்டு லட்சத்து 50ஆயிரம் முதலீடு செய்தால் 25 ஆயிரம் வட்டி என கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து வசூல் செய்துள்ளார். இந்த முதலீடுகளை அவர் ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொருவரை பணியமறுத்தி அவர்கள் மூலமாக இவ்வளவு தொகையை முதலீடாக பெற்றுள்ளார்.

தற்பொழுது பணம் கொடுத்தவர்கள் இந்த பணியில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கேட்பதால் அவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்தனர். இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ள தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதியிலும் ஏற்கனவே காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயனிடம் இந்நிறுவனத்தில் முதலீடுகளை வாடிக்கையாளர்களை சந்தித்து பணத்தை பெற்று தந்தவர்கள் நேரடியாக வந்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது.. எங்களை வைத்து பணம் வாங்கி வசூல் செய்து தற்பொழுது அர்ஜுன் கார்த்திக் மற்றும் எவாஞ்சலின் அவிலா தெரசஸ் இருவரும் பல்வேறு காரணங்களை குறிப்பிடுகின்றனர். பணத்தை திருப்பி தர மறுக்கின்றனர் முதலீட்டாளர்கள் எங்களிடம் தொடர்ந்து பணத்தை கேட்பதால் வேறு வழியின்றி தற்பொழுது ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம் என்றனர். பணம் முதலீடு செய்தவர்கள் தொடர்ந்து எங்களை கேட்டுக்கொண்டே இருப்பதால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், காவல்துறையை நாடி உள்ளோம் இவர்கள் இருவரிடம் தான் முதலீடு செய்த பணம் 300 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக ஐஜி அலுவலகத்திற்கு வந்தவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிறுவனத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடம் 1லட்சம் முதல் 30 லட்சம் வரை மூதலீடாக அர்ஜுன் கார்த்திக் பெற்றுள்ளார் என புகார் மனு அளித்தவர்கள் குறிப்பிட்டனர். கடந்த டிசம்பர் 2022 முதல் இவர்களுக்கு மாத மாதம் கொடுக்க வேண்டிய பணம் வரவில்லை . தற்பொழுது தலைமறைவாக இருக்கும் அர்ஜுன் கார்த்திக் மற்றும் எவாஞ்சலின் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து முதலீட்டாளர்களின் பணத்தைப் பெற்றுத் தரும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision