2வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் - பொதுமக்கள் கடும் அவதி

2வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் - பொதுமக்கள் கடும் அவதி

Advertisement

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தவித்துப் போயினர். வேலைக்குச் செல்ல முடியாமலும் ஊர் திரும்ப முடியாமலும் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். அதேநேரத்தில் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என, தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 90% சதவீத பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Advertisement

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடந்து 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப கோரியும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும், தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் 2வது நாளாக காலை முதலே அன்றாட பணிகளுக்கு செல்பவர்களும், அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் பேருந்துகள் இயக்காததால் கடும் அவதிக்குள்ளாகினர்.மேலும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். சில தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வும் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

திருச்சியில் உள்ள 16 பணிமனைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பல மாவட்டங்களுக்கு திருச்சியிலிருந்து செல்கின்றன. இதில் அரசு பேருந்துகள் 90% சதவீதம் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.