திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

வருடம் தோறும் கார்த்திகை மாதம் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் சுமார் 150 கிலோ எடையுள்ள விளக்கு திரியை கொண்டு தீபம் ஏற்றுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதம் தமிழ் மாதத்தின் படி கார்த்திகை மூன்றாம் தேதியும் ஆங்கிலம் தேதிப்படி 19ம் தேதியும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக இவ்வருடம் சுமார் 150 கிலோ எடையுள்ள திரி தயாரிக்கும் பணிகள்  மலைக்கோட்டை கோயிலில் உள்ள தாயுமானவர் சந்நிதியில் துவங்கியது.

நூறு கிலோவாக ஒரு திரியும், மற்றொன்று 50 கிலோ எடையுள்ள மற்றொரு திரியும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஊழியர்கள் பெரிய அளவிலான காடா துணியில் திரிநூல்கள் கொண்டு திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் அந்த திரியின் உள்ளே பருத்திகொட்டை வைக்கப்பட்டு  2 மூட்டைகளாக சுற்றி கட்டி அதனை மலைக்கோட்டையின் உச்சிப்பிள்ளையார் சந்நிதியில் அமைந்துள்ள விளக்கு ஏற்றும் துணியின் திரியை  இன்று வைக்க உள்ளனர்.

பின்னர் அதில் நெய், இழுப்ப எண்னை   மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி அதனை கார்த்திகை தீபம் ஏற்றும் நாள் வரை எண்ணெயில் ஊர விட்டு விடுவார்கள். திரி தயாரிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். முதல் நாள் 15 டின் எண்ணை ஊற்றப்பட்டு அதன் பின்னர் ஒவ்வொரு நாள் இடைவெளியில் என மொத்தம் 50 டின் எண்ணை ஊற்றபட உள்ளது. 

இம்மாதம் 19ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn