திருச்சி மக்களை வியப்படைய செய்த பசு

Sep 16, 2023 - 09:13
Sep 16, 2023 - 09:17
 1305
திருச்சி மக்களை வியப்படைய செய்த பசு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பரணிதரன் (20). விவசாயம் செய்து வரும் இவர், வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் பசுமாடுகளில் ஒன்று இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது.

அந்த பசு தனது முதல் பிரசவத்தில் ஆண் கன்றுக்குட்டியை ஈன்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்த அந்த பசு நேற்று முன்தினம் ஆண், பெண் என இரண்டு கன்றுக்குட்டிகளை பிரசவித்துள்ளது. கால்நடைகளில் நூற்றில் ஒரு மாடு இதுபோன்று இரண்டு கன்று ஈனுவது நடக்கலாம்.

மாட்டுக்கு நல்ல ஊட்டம் இருக்கும் நிலையில், நல்ல கரு சேர்ந்திருப்பின் இதுபோல இரட்டை கரு உருவாகி இரண்டு கன்று ஈன வாய்ப்புள்ளது. இந்நிலையில் திருவாசி கிராமத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுமாட்டை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision