திருச்சி விமான நிலையத்தில் 399 கிராம் தங்கம் கழிவறை சுத்தம் செய்யும் தொட்டியில் பறிமுதல்!!

திருச்சி விமான நிலையத்தில் 399 கிராம் தங்கம் கழிவறை சுத்தம் செய்யும் தொட்டியில் பறிமுதல்!!

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் உள்ள இமிக்ரேஷன் பிரிவு அருகில் இருந்த கழிவறையிலிருந்து ரூபாய் 20,28,516/- மதிப்பிலான 399 கிராம் தங்கம் பறிமுதல் செய்துள்ளனர். 

Advertisement

கழிவறையை சுத்தம் செய்யும் தொட்டியில் தங்க நகைகள் கிடப்பதாக சுங்கத் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தபோது கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து சுத்தம் செய்யும் தொட்டியில் தங்க நகையை போட்டது யார் ? என விசாரணை செய்து வருகின்றனர்.