திருச்சி மாநகராட்சி மேயர்,துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி மேயர்,துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி மேயர்,துணை மேயர் வேட்பாளர்கள் விபரம்

மேயர் வேட்பாளர்

பெயர் : மு. அன்பழகன்
வயது : 66
படிப்பு : MA
இனம் : கள்ளர்
மனைவி : சித்ரா
மகள் : ரக்ஷனா
தொழில் : முழு நேர அரசியல்வாதி
கட்சி : திமுக
பொறுப்பு : திருச்சி மாநகர செயலாளர்
போட்டியிட்ட வார்டு : 27


1980 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.1993 முதல் 1998ஆம் ஆண்டு வரை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர்.1999ஆம் ஆண்டு முதல் திருச்சி மாநகர செயலாளர்.2001 முதல் 2011ஆம் ஆண்டு வரை துணை மேயர்.2011 தேர்தலின்போது, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி மத்திய சிறையிலிருந்தபடி பழைய 32-வது வார்டில் போட்டியிட்டு, பிரச்சாரத்துக்கே போகாமல் வெற்றி பெற்றவர்.

2014ஆம் ஆண்டு திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சத்து 8 ஆயிரத்து வாக்குகள் பெற்று இரண்டாமிடம்.திருச்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதிலிருந்து நடத்தப்பட்டுள்ள 5 தேர்தல்களிலும் திமுக வேட்பாளராக மு.அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.அமைச்சர் கே.என்.நேருவின் நிழல் போல் செயல்பட்டு வருபவர் தான் அன்பழகன் நேருவிற்கு மிகுந்த விசுவாசி ஆகவும் நம்பிக்கைக்குரிய இடத்தில் அன்பழகன் இருக்கிறார்.

ஏற்கெனவே 2 முறை துணைமேயராக இருந்த மு.அன்பழகனுக்கு, இம்முறை மேயர் பதவியைப் பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார்.திருச்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டு 28 ஆண்டுகளுக்கு பிறகு, முதன் முறையாக திமுகவைச் சேர்ந்தவர் மேயர் பதவியை வகிக்க உள்ளார். குறிப்பாக ஆண் ஒருவர் திருச்சி மாநகரத்தில் மேயராகிறார்.

துணை மேயர் வேட்பாளர்....

திருச்சி மாநகராட்சி 33 வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திவ்யா வை திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு தி.மு க தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திவ்யா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க வில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் தனக்கோடி 32 வார்டு தி.மு.க பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். 28 வயதான திவ்யா தற்போது பி.காம் பட்டப்படிப்பு தொலைத்தூர கல்வியில் பயின்று வருகிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO