ஸ்ரீரங்கத்தில் மூலவர் சன்னதியில் ஐயப்ப பக்தர்கள், தற்காலிக ஊழியர்கள் மோதல்

ஸ்ரீரங்கத்தில் மூலவர் சன்னதியில்  ஐயப்ப பக்தர்கள், தற்காலிக ஊழியர்கள் மோதல்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இன்று திருநெடுந்தாண்டகத்துடன் வெகுவிமரிசையாக தொடங்குகிறது.   இந்த நிலையில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். இதில் கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் அதிகாலைலேயே சாமி தரிசன நேரம் தெரியாமல் கோயில் வாயிலில் காத்துக் கொண்டிருந்தனர். பின்னர் தரிசனம் துவங்கிய பொழுது உள்ளே மூலஸ்தானத்திற்கு அருகாமையில் வந்து கோயில் நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களை அடித்து சத்தம் எழுப்பி உள்ளனர்.

தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்கள் சத்தம் எழுப்ப வேண்டாம் என கூறியும், அதையும் தாண்டி இவர்கள் மீண்டும் உண்டிகளை தட்டி சத்தத்தை எழுப்பி உள்ளனர். ஒரு கட்டத்தில் வாய் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் பெருமாள் மூலஸ்தானம் முன்னிலையில் கர்நாடகா ஐயப்பன் பக்தர்களும், ஸ்ரீரங்கம் கோவில் ஒப்பந்த தற்காலிக ஊழியர்களும் சரமாரியாக அடித்துக் தாக்கி கொண்டனர்.

கோவில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர் (NMR)களுக்கும் ஏற்பட்ட மோதலாலில் கர்நாடக ஐயப்ப பக்தர் சென்னராவ் உட்பட பலர் தாக்கப்பட்டு ரத்தம் சொட்ட ஐயப்ப பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கலவர சூழ்நிலை உருவாகியது. சென்னா ராவ் தற்போது தங்களை தாக்கிய ஒப்பந்த ஊழியர்களான செல்வம், விக்னேஷ், பரத் ஆகியோர் குழுவினர் மீது தங்களை தாக்கியதாக போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். அடிபட்ட ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளனர். ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை கோபுரம் கொடிமரம் போன்ற இடங்களில் தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் கலைந்து போக சொன்னார்கள். மேலும் அடிபட்ட பக்தர்கள் தங்களை தாக்கிய மூவர் மீதும் புகார் கொடுத்து காவல் துறையினர் அவர்களின் புகாரை வாங்காமல் அவர்களை விரட்டி விடும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision