வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் மல்டிபேக்கர் ஸ்டாக்கின் 1,00,00,000 பங்குகளை வாங்கியது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் மல்டிபேக்கர் ஸ்டாக்கின் 1,00,00,000 பங்குகளை வாங்கியது.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுகளை எட்டிய நிலையில், இந்திய சந்தைகள் நேற்று சற்றே உயர்ந்து வர்த்தக்த்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் 70,000க்கு மேல் ஏறியது, அதே நேரத்தில் நிஃப்டி 21,000 வாசலைத் தாண்டியபின் சற்றே உயர்ந்தது, இவை இரண்டும் வரலாற்று மைல்கற்களை தொட்டன. இந்த குறிப்பிடத்தக்க உயர்வு இந்திய சந்தையின் எதிர்கால வாய்ப்புகளை நோக்கி முதலீட்டாளர்களை நம்பிக்கையை அதிகரித்து ஈர்க்கிறது.

இந்த மல்டிபேக்கர் பென்னி பங்கின் பங்குகள் அதன் முந்தைய முடிவான ரூபாய் 68.61 லிருந்து ஒரு பங்கின் மதிப்பு ரூபாய் 72.04 ஆக 5 சதவிகித அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குகளின் 52 வார அதிகபட்சம் ரூபாய் 76.21 ஆகவும், அதன் 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூபாய். 20.90 ஆகவும் உள்ளது. 

அந்த பங்கின் பெயர்தான், PARAMOUNT COMMUNICATIONS LTD. பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் பவர் கேபிள்கள், டெலிகாம் கேபிள்கள், ரயில்வே கேபிள்கள் மற்றும் பிரத்யேக கேபிள்களை உள்ளடக்கிய கம்பிகள் மற்றும் கேபிள்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ரூபாய் 1,700 கோடிக்கு மேல் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 43 சதவிகித CAGR என்ற நல்ல லாப வளர்ச்சியை வழங்கியுள்ளது.

நெக்ஸ்பேக்ட் லிமிடெட், ஒரு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர், 1,00,00,000 பங்குகளை வாங்கியது, இந்நிறுவனத்தில் 3.58 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. இது மிகப்பெரிய FII பங்குதாரராக உள்ளது. இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 28.6 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 210.54 கோடியாகவும், நிகர லாபம் 107 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 14.53 கோடியாகவும் இருந்தது. H1FY24ல், H1FY23 உடன் ஒப்பிடும்போது நிகர விற்பனை 21.3 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 420.17 கோடியாகவும், நிகர லாபம் 270 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 28.12 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்தின் வலுவான நிதி செயல்திறன் FY23ல் தொடர்ந்தது, நிகர விற்பனை 37 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 796 கோடியாகவும், நிகர லாபம் FY22 உடன் ஒப்பிடும்போது 500 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 48 கோடியாகவும் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் ஆர்டர் புத்தகமும் மிக வலுவாக உள்ளது.

நிறுவனத்தின் பங்குகள் 21.2 சதவிகிதம் ROE மற்றும் 15 சதவிகிதம் ROCE ஐக் கொண்டுள்ளன. இந்த பங்கு 1 வருடத்தில் 240 சதவிகிதமும், 3 ஆண்டுகளில் 840 சதவிகிதமும், பத்தாண்டுகளில் 5,100 சதவிகிதமும் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்தது. முதலீட்டாளர்கள் இந்த ஸ்மால்-கேப் கேபிள் உற்பத்தி பங்கு மீது ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

(Disclimer : கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனை அல்ல.)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision