அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 300க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் போராட்டம்!!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 300க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் போராட்டம்!!

திருச்சி 49-வது வார்டு குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் சாலை வசதி, குப்பைத்தொட்டி சாக்கடை வசதி உள்ளிட்டவை செய்து தரக் கோரியும், ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள புகழ் பெற்ற காலம் சுகாதாரமற்ற நிலையில் சேதமடைந்து இருப்பதை சீர் செய்து தர வலியுறுத்தியும்,

Advertisement

சிறிய மழை பெய்தால் கூட அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் மழைநீர் வடிவதற்கு உரிய வழிவகை செய்து தர வலியுறுத்தியும், அதிக மக்கள் குடியிருக்க கூடிய பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரக் கோரியும்,பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த ஒரு வசதிகளும் செய்து தரவில்லை எனக் கூறி அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement