கலைகட்டிய திருச்சி தேசிய கல்லூரியின் "கிராமத்து பொங்கல் திருவிழா"!!

கலைகட்டிய திருச்சி தேசிய கல்லூரியின் "கிராமத்து பொங்கல் திருவிழா"!!

தமிழர்கள் காலந்தோறும் பாரம்பரியமாகவும், தமிழனை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டும் ஒரு விழாவாகவும், தமிழர்களுக்கான ஒரு விழாவாகவும், தைத்திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா தான் இந்த பொங்கல் திருவிழா. 

Advertisement

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள், கொரோனா காலகட்டத்திற்கு மத்தியில் மாணவர்களுக்கு கல்வி என்னும் பெருஞ்செல்வம் கிடைத்திட வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் திருச்சி தேசிய கல்லூரி விளையாட்டு துறை சார்பாக "மாபெரும் கிராமத்து பொங்கல் திருவிழா"வை திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதிகளில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பரிசல் சவாரியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவ்விழாவின் தமிழர்களின் பாரம்பரிய கலைகளுக்கு உயிரூட்டும் வகையில் பறையாட்டத்தில் தொடங்கி பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு கிராமத்து பொங்கல் வைத்து மாபெரும் திருவிழாவாக மாணவ மாணவியர்களோடு கொண்டாடினர். குறிப்பாக கிராமப்புற இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனங்கள் என பொங்கல் விழாவை மகிழ்ச்சி பொங்க மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.india.thefoodiee

Advertisement

தேசிய கல்லூரி பொங்கல் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா மகன் "கார்த்திக் ராஜா" வருகை புரிந்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன், தேசிய கல்லூரி துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை தலைவர் பிரசன்ன பாலாஜி விழாவை ஒருங்கிணைத்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a