அடுத்த செக் ஜெகத்ரட்சகனுக்கு சவீதா குழுமங்கள் ரூபாய் 1,200 கோடி வரி ஏய்ப்பு !!

அடுத்த செக் ஜெகத்ரட்சகனுக்கு சவீதா குழுமங்கள் ரூபாய் 1,200 கோடி வரி ஏய்ப்பு !!

திமுக எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா குழுமத்தின் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய சுமார் 100 இடங்களில் கடந்த ஒருவாரமாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள், மதுபான ஆலையில் 500 கோடிக்கு போலிச் செலவுகள் செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் இருந்து 300 கோடி ரூபாய் திருப்பி தரப்பட்டு செலவினம் என கணக்கு காட்டப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கணக்கில் வராத 32 கோடி ரொக்கம் மற்றும் 28 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளையும் வருமான வரித்துத்துறை கைப்பற்றியதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலைகள், மருந்து பொருட்கள், மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்டவை சோதனையிடப்பட்ட இடங்களில் உள்ளடங்குவதாக அந்த நிறுவனங்களின் பெயர் குறிப்பிடாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் கடித நகல்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 400 கோடிக்கு மேல் கணக்கில் வராத கட்டண ரசீதுகள் மற்றும் 25 கோடிக்கு உதவித்தொகை வழங்கியதாக பொய்யான உரிமைகோரலை (reclaim) அவர்கள் கண்டறிந்துள்ளனர். "ஒரு குழுவானது மாணவர்களை கல்லூரியில் சேர்ப்பதற்காக முகவர்களின் சேவையைப் பயன்படுத்தியது, இதற்காக கணக்கில் காட்டப்படாத கமிஷன் தொகையாக சுமார் 25 கோடி செலவு செய்யப்பட்டது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 கோடிக்கு போலியான செலவீன கணக்கும் காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மதுபாட்டில்கள், சுவைகள், கூடுதல் நடுநிலை மது மற்றும் சரக்குக் கட்டணங்கள் வாங்குவதற்காக சுமார் 500 கோடி ரூபாய்க்கு போலிச் செலவுகள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இல்லாத பல்வேறு நிறுவனங்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டு, கணக்கில் காட்டப்படாத முதலீடுகளைச் செய்ததற்காக பணமாக திரும்பப் பெறப்பட்டதைக் காட்டுவதற்கான ஆதாரங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். "கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அறங்காவலர்களின் தனிப்பட்ட செலவினங்களுக்காகவோ அல்லது பல்வேறு வணிகங்களில் ஈடுபடுத்துவதற்காகவோ அந்தந்த அறக்கட்டளைகளில் இருந்து 300 கோடி திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு தொழில் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக ஒரு குழுவால் செலுத்தப்பட்ட பணமும் இதில் அடங்கும்" என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision