மூத்த குடிமக்களுக்கு ‘சூப்பர் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட்’ திட்டம்.
பேங்க் ஆஃப் இந்தியா சூப்பர் ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஆண்டுக்கு 7.50 சதவிகிதம் வட்டியாக வழங்குகிறது. இந்தச் சலுகை தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் கிடைக்கும். ஆனால் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 50 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு மட்டுமே இது பொறுந்தும்.
நிலையான வைப்புத்தொகையின் குறிப்பிட்ட முதிர்வு காலம் 175 நாட்கள் இந்த திட்டம் ஜனவரி 1, 2024 முதல் தொடங்கப்பட்டிருக்கிறது. சூப்பர் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட், அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNIs) மற்றும் கார்ப்பரேட்டுகள் தங்கள் கூடுதல் பணத்தை குறுகிய காலத்திற்கு முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 175 நாட்களுக்கு ஆண்டுக்கு 7.50 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
இந்த நிலையான வைப்பு முதலீட்டிற்கான மிகவும் கவர்ச்சிகரமான விருப்பங்களில் ஒன்றாகும். இதே காலத்திற்கான மற்ற நிலையான வைப்பு விருப்பங்களை விட இது சிறந்தது. இந்த சிறப்பு நிலையான வைப்புத்தொகையானது உள்நாட்டு ரூபாய் நிலையான வைப்புத் தொகைகளுக்கு மட்டுமே, இந்த சலுகை வரையறுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
60 வயது மற்றும் 80 வயதுக்கு கீழ் உள்ள மூத்த குடிமக்கள் 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட 3 ஆண்டுகள் வரையிலான சில்லறை நிலையான வைப்புகளுக்கு (ரூபாய் 2 கோடிக்கும் குறைவானது) 0.50 சதவிகிதம் கூடுதல் வட்டியைப் பெறுவார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision