திரும்புகிறதா வரலாறு ? விஜய்கு குடைசல் கொடுக்கும் திமுக...
திக, திமுக, அதிமுக, மதிமுக, இப்படி திராவிட கட்சிகள் சிதறிக்கொண்டே இருந்தாலும் மாநில மக்களின் மனதில் சட்டமன்ற தேர்தல் என்றால் அதிமுக அல்லது திமுக இந்த இரு பெரும் கட்சிகளே மக்களின் மனதில் நிழலாடும் அதற்கு மாற்றாக தொடங்கப்பட்ட தேமுதிக தன்னிச்சையாக போட்டியிட்ட காலத்தில் பெற்ற வாக்குகளைவிட கூட்டணிக்குப்பின் தன்னுடைய வாக்கு வங்கியை சிதைந்துக்கொண்டது.
அதன்பின்னர் வந்த நாம் தமிழர் இன்றும் தன்னிச்சையாக தனித்துவமாக போட்டியிடுவதால் தன்னுடைய வாக்குவங்கியை இழக்கவில்லை என்பதென்னவோ உண்மை. அடுத்ததாக வந்த மய்யம் மையம் தவறியதால் தலைவரால் கூட வெற்றியை ருசிக்க முடியவில்லை. ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலுமாக ஆண்டவர் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு டார்ச் ஒளி கொடுக்கவில்லை வலியைத்தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
ரஜினிகாந்த பாணியில் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா வர்ற வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்னு இப்படி சொல்லி சொல்லியே தன்னுடைய ரசிகர்களை உசுப்பேத்திக்கொண்டிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் கடைசி வரை வராமலேயே போனார். அரசியலில் அது அந்த காலம் போல, இப்ப விஜய் டேர்ன் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள். விஜயை அவரும் சலிக்காமல் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கிறார் கூட்டம் போடுகிறார், பிரியாணி போடுகிறார் கூட்டம் நடத்த சொல்கிறார் மாலை நேர வகுப்பு மருத்துவ முகாம் என தனது ஆட்களுக்கு ஆசையை தூண்டிவிடுகிறார். எல்லாம் சரி அரசியலுக்கு வருவாரா? வர விடுவார்களா? திராவிடர்கள் இதுதான் தற்பொழுதைய மில்லியன் டாலர் கேள்வி.
1992ல் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, பல கஷ்டங்களையும், அவமானங்களையும், பல வெற்றிகளையும் சந்தித்து, இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் சுறா, வில்லு, குருவி என தொடர் தோல்வி படங்களை கொடுத்த விஜய்யை மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், வித்யுத் ஜாம்வால், ஜெயராம், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மீண்டும் வீறு கொண்டார் விஜய். தனது படங்களில் அரசியல் வாடையை வீச வைத்து ரஜினியைப் போலவே தன்னுடைய ரசிகர்களை தன்னைவிட்டு தள்ளிப்போகாமல் தக்க வைக்க பிரகீரதன முயற்சிகளை மேற்கொண்டு தக்கவைத்தும் கொண்டார்.
தற்பொழுது கோலிவுட் வட்டாரங்களில் வலம் வந்த பொழுது கிடைத்த தகவல்கள் 'லியோ' பாடல் வெளியீட்டு விழாரத்தான நிலையில், 'லியோ' சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்ததால் திமுக, விஜய் மோதல் தணிந்துள்ளது. லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில், விஜய்யுடன் சினிமா விஷயத்தில் மோதல் வேண்டாம். நாம் ஏதாவது செய்தால் அவர் ரஜினி போன்று ரவுசு காட்ட தொடங்கினால், லோக்சபா தேர்தலில் தனி வேட்பாளரை களம் இறக்கினாலும் இறக்குவார். அந்த நிலையை நாமே உருவாக்க வேண்டாம். 'லியோ' படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி கொடுத்துவிடுவோம் என்று நினைத்துள்ளது ஆளும் தரப்பு. விஜய்யும் சில சமரசங்களை செய்து கொண்டுள்ளதாக கேள்வி அவரும் இப்போதைக்கு அரசியல் பேசமாட்டார் என்று தெரிகிறது.
ஆனாலும், அதிகாலை காட்சிக்கு அதாவது அதிகாலை 3 மணி, 4 மணிக்கு போடும் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. 'துணிவு' படத் தின் அதிகாலை காட்சிக்கு வந்த ஒரு ரசிகர், சென்னை கோயம்பேடு பகுதி தியேட்டர் வாசலில் நடந்த கொண்டாட்டத்தின்போது பரிதாபமாக உயிர் இழந்தார். அதிலிருந்து ரஜினியின் 'ஜெயிலர்', சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' போன்ற படங்களுக்கே அதிகாலை காட்சிக்கு அனுமதி தரவில்லை, இதனால் லியோவுக்கு கொஞ்சம் இழப்பு ஏற்படலாம் என்றாலும், அந்த இழப்பை காலை 9 மணி காட்சி மூலமாக சமாளித்து விடுவார்கள். விரைவில் இந்த அறிவிப்புக்காக தமிழக அரசுக்கு விஜய் நன்றி சொல்லலாம். தமிழக அரசின் சாதனையை பாராட்டலாம்'' என்று சிரிக்கிறார்கள்.
ரஜினிகாந்த் போல படம் வரும் பொழுது மட்டும் குரல் கொடுத்துவிட்டு விஜய் பம்மிவிடாமல் எதிர்த்து அடிப்பார் என்கிறார்கள் அவர்களின் ரசிகர்கள் இதற்கெல்லாம் 2026 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision