திருச்சி மாநகராட்சியின் முதல் ஆண் மேயராகிறார் அன்பழகன்
1980 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 1993 முதல் 1998ஆம் ஆண்டு வரை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர்,1999ஆம் ஆண்டு முதல் திருச்சி மாநகர செயலாளர். பின்பு 2001 முதல் 2011ஆம் ஆண்டு வரை துணை மேயர்.2011 தேர்தலின்போது, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி மத்திய சிறையிலிருந்தபடி பழைய 32-வது வார்டில் போட்டியிட்டு, பிரச்சாரத்துக்கே போகாமல் வெற்றி பெற்றவர். 2014ஆம் ஆண்டு திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சத்து 8 ஆயிரத்து வாக்குகள் பெற்று இரண்டாமிடம்.திருச்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதிலிருந்து நடத்தப்பட்டுள்ள 5 தேர்தல்களிலும் திமுக வேட்பாளராக மு.அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அமைச்சர் கே.என்.நேருவின் நிழல் போல் செயல்பட்டு வருபவர் தான் அன்பழகன் நேருவிற்கு மிகுந்த விசுவாசி ஆகவும் நம்பிக்கைக்குரிய இடத்தில் அன்பழகன் இருக்கிறார்.ஏற்கெனவே 2 முறை துணைமேயராக இருந்த மு.அன்பழகனுக்கு, இம்முறை மேயர் பதவியைப் பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார்.
தற்போது கே.என்.நேரு கட்டுபாட்டில் 30 வார்டுகள் வேட்பாளர்களும் வெற்றி பெற்று விட்டனர். அமைச்சர் அன்பில் மகேஷ் இருந்த வார்டுகளில் திமுக கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்கள் தோல்வி கண்டுள்ளனர் இருந்தாலும் திருச்சி மாநகராட்சி 16 வது வார்டில் மகேஷின் தீவிர ஆதரவாளரான மதிவாணன் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அவருக்கு மேயர் வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே உறுதியாக கே.என். சேகரன் திருவரம்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை நிறுத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்த பொழுது அவரை வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாகவே வாபஸ் பெற வைத்தது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை. இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு நிழலாக இன்றும் இருக்கும் அன்பழகனுக்கு தான் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.