திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 250 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் சிறப்பு முகாம் -அமைச்சர் ஆய்வு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 250 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் சிறப்பு முகாம் -அமைச்சர் ஆய்வு

திருவெறும்பூர் துவாக்குடியில் அமைந்துள்ள NIT (என். ஐ. டி. )தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல்  முகாம் அமைய உள்ள இடத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.


                 என் ஐ டி வளாகத்தில்  சுமார் 250 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தல் முகாம் 2 அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ளது.முகாமை பார்வையிட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அனைத்து வசதிகளையும் செய்து தர உத்தரவிட்டார்.

தேசிய தொழில்நுட்ப கழகம் இரண்டு அரங்குகளை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளது. நேரடியாக மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அரங்குகளுக்கு தேசிய தொழில்நுட்ப கழகம் தனியாக சாலைகளை அமைத்து கொடுத்துள்ளது. கோவிட்  லேசான தொற்றுடையவர்கள் இங்கே தனிமைப்படுத்த படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd