ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -திருச்சியில் பரபரப்பு:

ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற  விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -திருச்சியில் பரபரப்பு:

திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொது நல ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தற்போது திருச்சி ரயில்வே நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

Advertisement

திருச்சி மாவட்ட தமிழக விவசாய சங்கத்தின் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட மக்கள் அதிகாரம், காவிரி மீட்பு குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையின் மூன்று அடுக்கு தடைகளை மீறி, ரயில்வே நிலையம் சென்றனர். ஆனால் போராட்டக்காரர்களை ரயில்வே நிலையம் உள்ள செல்ல அனுமதிக்காததால், ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், அதற்கு துணைபோகும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ரயில்வே நிலையத்தில் முற்றுகையிட்ட வந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுப்புகளை கொண்டு தடுத்ததால், தடுப்புகளை கடந்து உள்ளே சென்றதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில்வே நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு ரயில்வே நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS