முரண்பட்ட கருத்து வேறுபாடு - திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் தலைவர்கள் கடும் வாக்குவாதம்

முரண்பட்ட கருத்து வேறுபாடு - திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் தலைவர்கள் கடும் வாக்குவாதம்

3 வோளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை விவசாயிகளுக்கு ஆதரவு பயணம் செய்ய வேண்டும் என அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் முடிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் குருசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி உட்பட பல்வேறு விவசாய அமைப்பினை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆலோசனை கேட்ட போது தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு ஐக்கிய விவசாயிகள் முண்ணனி சங்கத்தினர் அனுமதி பெற்று கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை விவசாயிகளுக்கு ஆதரவு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் குருசாமி... 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக விவசாயிகள் என்ற உணர்வோடு இந்த பயணத்தை தொடங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் சங்க தலைவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் இருதரப்பினரையும் சமாதனம் செய்தனர்.

பின்னர் கூட்டத்தின் முடிவில் அக்டோபர் 2ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி சமாதி முன்பு அனைத்து விவசாய சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதம் போராட்டம் மட்டும் நடத்தப்போவதாக முடிவெடுத்துள்ளனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை ஆதரவு பயணம் தொடங்கும் என சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn