திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வரும் தங்க கடத்தல், 49.64 இலட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!!

திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வரும் தங்க கடத்தல், 49.64 இலட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!!

திருச்சி விமான நிலையத்தில் 971 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு மீட்பு விமானங்கள் மூலம் வருபவர்கள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

Advertisement

இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வேட்டை நடத்தி தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை 5.15 துபாயிலிருந்து வந்த திருச்சி திருவரம்பூரை சேர்ந்த யாழ்வேந்தன் (23) என்ற பயணியிடம் 971 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

இவர் தங்கத்தை பேஸ்ட் வடிவில் எடுத்து வந்தார். அப்போது அவர் கொண்டுவந்த பேஸ்ட் வடிவிலான தங்கத்தை பிரித்து எடுத்த போது 971 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் யாழ்வேந்தன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 49.64 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

  1. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO