சென்னைக்கு சிங்கம் புறப்பட்டது என திருச்சியில் போஸ்டர்

சென்னைக்கு சிங்கம் புறப்பட்டது என திருச்சியில் போஸ்டர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவின்போது கள்ள ஓட்டு போட வந்ததாக திமுகவினரை தாக்கியது, விதிமுறை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து திருச்சியில் இரண்டு வாரம் தங்கி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2 வார காலமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிளாசம் ஓட்டலில் தங்கிருந்தார். இரண்டாவது வாரமான இன்று கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 6வது முறையாக இன்று காலை கையெழுத்திட்டார். பின்னர் இன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அவரை திருச்சி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சென்னை புறப்பட்டதை தெரிவிக்கும் விதமாக சிங்கம் ஒன்று  புறப்பட்டதே  சென்னையை நோக்கி என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை மாநகர் முழுவதும் ஒட்டி உள்ளனர். கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஜெயகுமாரை அதிமுக மாவட்ட செயலாளர்கள் குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அவரை காரில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO