கொரோனா தடுப்பூசிக்காக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் சாஸ்திர நிகர்நிலை பல்கலைக்கழகம்

கொரோனா தடுப்பூசிக்காக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் சாஸ்திர நிகர்நிலை பல்கலைக்கழகம்

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் வரும் கொரோனா கல்வியாண்டில் (2021-2022) வளாகத்திற்கு வர ஏதுவாக  அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 8000 மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் தடுப்பூசிக்கான செலவை ஈடுகட்ட உதவும். அரசு உத்தரவு வந்த பின்பு வகுப்புகள் தொடங்கப்படும் பொழுது மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்புடன் வர இயலும். சமீபத்தில் மாணவர்கள் இணைய வழி தேர்வு எழுத உதவும் வகையில் தங்களது இணைய வழி இணைப்பு செலவுக்காக ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 வீதம் சுமார் 12,000 மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தனது ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது தமிழ்நாடு அரசு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த முகாம்கள் மூலம் சுமார் 600 பேர் பயன்பெற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF