கொட்டும் மழையிலும் களமிறங்கி பணியாற்றும் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா!

கொட்டும் மழையிலும் களமிறங்கி பணியாற்றும் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா!

நிவர் புயல் முன்னெச்சரிக்கை தடுப்பு பணியில் தானும் களப் பணியாற்றி வருகிறார் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா

Advertisement

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா தலைமையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் மேற்பார்வையில், திருமானூர், திடீர் குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு பணி பயிற்சி முடித்த காவலர்களுக்கு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும், புயலில் பாதிக்கப்பட்டால் மக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது பற்றியும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது பற்றியும் களத்தில் இறங்கி அறிவுரை வழங்கி வருகிறார்.

கொட்டும் மழை என்று பாராது மக்கள் பாதுகாப்பில் அக்கறை கொள்ளும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயாவின் செயல் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm